×

2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற நிதி குறித்து வெள்ளை அறிக்கை: பாஜ வலியுறுத்தல்

சென்னை: 2014க்கு முன்பு பெரு நிறுவனங்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராகுல் காந்தி தயாரா என ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்: 2014ம் ஆண்டுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களிடம் பெற்றுக் கொண்ட நிதி பற்றி அனைவருக்கும் தெரியும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நிதிக்கு முறையாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், இதை குறை கூறுபவர்கள், 2014க்கு முன்பு காங்கிரஸ் பெற்ற நிதி விவரங்களை வெளியிட வேண்டும்.

அம்பானி, அதானியை போன்ற பெரும் பணக்காரர்களை விமர்சித்து கொண்டே, அவர்களிடம் நன்கொடைகளை வாங்கி குவிக்கிறது காங்கிரஸ். அம்பானி, அதானி குழும நிறுவனங்களுடன் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. 2014க்கு முன்பாக குறைந்த பட்சம் 2004ல் ராகுல் காந்தி எம்.பி.யான பிறகு கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு நன்கொடை பெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நம் பரம்பரைக்கு சொந்தமான பிரதமர் பதவியை ஒரு டீ கடைக்காரர் மகனான மோடி பிடித்து விட்டாரே என்ற எரிச்சலில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி வெறுப்பை கக்கி வருகிறார். அதற்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற நிதி குறித்து வெள்ளை அறிக்கை: பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Chennai ,ANS ,Prasad ,Rahul Gandhi ,Tamil Nadu ,
× RELATED பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ்...